திருவள்ளூர்: எண்ணூர் அருகே உள்ள வல்லூரில், சிட்டி கேட் ஸ்டேஷன் (City Gate Station (Mother Station)) 1.4 ஏக்கரில் டொரண்ட் கேஸ் (Torrent Gas) நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 33 லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 25 CNG நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளன. வல்லூரில் உள்ள சிட்டி கேட் நிலையத்திலிருந்து இந்த 25 CNG நிலையங்களுக்கு எரிவாயு கொண்டுவரப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டீசல், பெட்ரோலுக்கு இது மாற்றாக அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள CNG வாகனங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலார் முனைவர் வெ. இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலர் நா. முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, டொரண்ட் கேஸ் (Torrent Gas) நிறுவனத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தகைசால் தமிழர் விருது உருவாக்கம்- தமிழ் தொண்டாற்றுபவர்களுக்கு கௌரவம்!