ETV Bharat / state

ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: மனுதாரருக்கு 5 ஆண்டுகள் தடை - அறநிலைய கூட்டங்களுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கக் கூடாது

இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Aug 9, 2021, 1:54 PM IST

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல்செய்த மனுவில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்க தடைவிதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்து மதத்தைப் பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்குத் தலைமை வகிக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இந்தியா மதச்சார்பற்ற நாடு எனவும், இந்திய அரசியல் சட்டம், குடிமக்களுக்கு கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது.

முக்கியப் பதவிகளை வகிப்பவர்கள், பதவியேற்கும்போது கடவுள் பெயரிலோ, அரசியல் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

ஸ்டாலினுக்கு எதிரான வழக்குத் தள்ளுபடி
ஸ்டாலினுக்கு எதிரான வழக்குத் தள்ளுபடி

எந்த மதமும் குறுகிய மனப்பான்மையைப் போதிக்கவில்லை எனவும், பிற மதத்தினரைப் புண்படுத்த கூறவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தத்தல்ல; இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொது நல வழக்குகள் தாக்கல்செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.