ETV Bharat / state

"நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது கண்டிக்கத்தக்கது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுக் கலந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

stalin
stalin
author img

By

Published : Jan 11, 2023, 1:49 PM IST

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சாதிய வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அதில், "வேங்கைவயலில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கிராமத்தில் ஆய்வு செய்தனர். மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாதிய பாகுபாடு அங்கொன்றும், இங்கொன்றும் இருப்பதை வேங்கைவயல் சம்பவம் காட்டுகிறது. தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாம் எவ்வளவுதான் பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள் சமூக அமைதியிலும், ஒற்றுமையிலும் தடைக்கற்களாக அமைகின்றன" என்று கூறினார்.

இதையும் படிங்க: குடிநீரில் மலம் கலந்த விவகாரம்; 20 பேருக்கு சம்மன் - விசாரணை தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.