சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற உள்ளது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 21) காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முக்கியமாக,
- காவல் துறை தலைமை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக சட்ட விவரங்களில் உதவிட இயக்குநகரத்தில் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.
- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கு கட்டப்படும் குடியிருப்புகளின் கட்டட பரப்பளவு அதிகப்படுத்தப்படும்.
- நடைமுறையில் உள்ள பாதுகாப்புத் தன்னார்வத் தொண்டர்கள் திட்டத்தை வலுப்படுத்த, தன்னார்வலர்களுக்கு அடையாளவில்லை மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும்.
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் காப்பீடு இடர் பாதுகாப்புத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மெரினா மீட்புப்பணிகள் நிலையப் பணியாளர்களுக்கு இடர் படி வழங்கப்படும்.
- தீயணைப்பு பணியாளர்களின் சேமநல நிதிக்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்.
- கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் போதை மருந்து ஆய்வு பிரிவுகள் அமைக்கப்படும்.
- தடய அறிவியல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் தொழில் நுட்பப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படும்.
- குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிறை வைப்பதற்காக தயாரிக்கப்படும் புத்தகங்களுக்கான செலவுத்தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
- மோப்ப நாய்கள் அல்லது மோப்ப நாய்களை கையாள்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு பராமரித்தல் மற்றும் தடுப்பூசிக்கானபடி உயர்த்தப்படும். இதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு ஒரு மோப்ப நாய்க்கு வழங்கப்படும். உணவு படி 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும்.
- காவலர் மருத்துவமனை வசதி, ஊர்க்காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்படும்.
- காவல் துறையில் மற்ற பிரிவுகளில் உள்ள காவல் பணியாளர்களைப் போலவே, தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும்.
- காவலர் பயிற்சி கல்லூரி காவல் அதிகாரிகளின் நிதி ஆதார வரம்பினை, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி அகத்திற்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
இதையும் படிங்க: திராவிடவியல் கோட்பாடு என்பதே திராவிட மாடல் சாசனம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு!