ETV Bharat / state

பொதுமக்களைச் சந்திக்க கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலில் அறிவுறுத்தல்! - Chief Minister

CM MK Stalin: பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குடும்ப வன்முறை புகார்களுக்கு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குடும்ப வன்முறை புகார்களுக்கு, உடனடி நடவடிக்கை எடுக்ப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 9:15 AM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு நேற்று (அக்.04) நடைபெற்றது. ஆலோசனை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “நமது அரசின் முன்னோடித் திட்டங்களில் ஏழை எளிய மக்களிடையே, குறிப்பாக, மகளிரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டம், கடந்த மாதம் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களாக, மகளிருக்கான விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, புதுமைப்பெண், நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம், ஊட்டச்சத்தை உறுதி செய் போன்ற திட்டங்கள் உள்ளன.

இதில் குறிப்பாக, மாணவர்களின் காலை உணவுத் திட்டம். மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், உங்களது தனிப்பட்ட பங்களிப்பை பாராட்ட விரும்புகிறேன். இத்திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட நீங்கள் இதில் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நமது மாநிலத்தில் தொழில் துறையின் வளர்ச்சிக்காக பல கொள்கைகளையும் வெளியிட்டு, அந்நிய முதலீட்டாளர்களை நமது மாநிலத்திற்கு ஈர்த்து, அதன் மூலம் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கிட அரசு அரும்பாடுபட்டு வருகிறது. மேலும், அரசின் மற்ற திட்டங்களின் பலன்கள் உரியவர்களை முழுமையாகச் சென்றடைய வேண்டுமானால், மாநில நிர்வாகம் மட்டுமல்ல, மாவட்ட நிர்வாகமும் தொய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்.

ஏழை, எளிய மக்களிடம் நேரடி தொடர்பில் நீங்கள் இருக்க வேண்டும். திட்ட ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது மட்டுமல்லாமல், அதன் பலன் எந்த அளவு மக்களைச் சென்றடைந்துள்ளது, அதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பதை எல்லாம் நீங்கள் நேரடியாக அறிந்து அவற்றை நீக்கிட வேண்டும்.

பல மாவட்டங்களில் நிலம் தொடர்பான பிரச்னைகள் தொடர்ந்து காணப்படுகின்றன. சில நேரங்களில் அவை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவும் மாறி விடுகிறது. எனவே, நில அளவைத் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாதந்தோறும் நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கென மட்டுமே ஆய்வுக் கூட்டம் நடத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்யுங்கள். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகளின் தரம் குறித்து கேட்டு அறியுங்கள். கல்வியும், மருத்துவமும் அரசின் இரு முக்கியமான முன்னுரிமைப் பிரிவுகள் என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள்.

அடுத்தபடியாக, பல்வேறு அரசுத் திட்டங்கள் தொடர்பாக வழங்கப்படும் சுற்றறிக்கைகளின் முழு விபரங்கள் சில நேரங்களில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களையும் சென்றடைவதில்லை என்று கேள்விப்பட்டேன். அரசு திட்டங்களின் விபரங்களை முழுமையாக அவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், நடைமுறையில் காணும் சிக்கல்கள் குறித்தும் அறிந்து கொள்ள, அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துங்கள்.

மேலும், ஏழை, எளிய மக்களுக்கு நலம் தரும் திட்டங்களில் எந்த தொய்வும், தாமதமும் இன்றி பணியாற்றுங்கள். அதனை நீங்கள் மனதிலே கல்வெட்டாகச் செதுக்கி வைத்துக் கொண்டு செயல்பட்டால், தமிழ்நாட்டு மக்களுக்கு அது வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தரும்.

முதல்வரின் முகவரி துறையிலும், மேலும், நான் மாவட்டங்களில் மேற்கொள்ளும் பயணங்களிலும் தொடர்ந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள். மேற்குறிப்பிட்ட அரசு சேவை குறைபாடுகள் எல்லாம் களையப்பட வேண்டுமென்றால், தலைமைச் செயலகத்தில் அமர்ந்து கொண்டு ஆணைகள் பிறப்பித்தால் மட்டும் போதாது. அந்த ஆணைகளின் செயலாக்கத்திற்கு மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த நோக்கத்தில்தான், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் மூலம் மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் பற்றியும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைp பற்றியும், நானே நேரடியாக ஆய்வு செய்து விவாதித்து வருகிறேன்.

ஒரு முக்கியமான சமூகப் பிரச்னை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அது, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை. இது ஒரு சமூகக் குற்றம். இந்த அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான எந்த வகையாna வன்முறையையும் சகித்துக் கொள்ளாது. கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவ்வகை குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கிறார்கள்.

இதன் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதை, நீங்கள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென ஒரு ஆய்வு நடைமுறையை உள்துறைச் செயலாளர் வடிவமைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல்துறைத் தலைவருக்கும் வழங்கி, அடுத்த மாதம் முதலே செயல்படுத்திட கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட நிrவாகத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள நீங்கள், மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். வழக்கமான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, காலதாமதத்தை தவிர்க்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களாட்சி தத்துவத்தின்படி, மக்கள்தான் நமது எஜமானர்கள். அவர்களுக்கு சேவை ஆற்றிடத்தான் நாம் அனைவரும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறோம். இதனை நீங்கள் ஒருபோதும் மறந்திடக் கூடாது. ஒரு சில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்களை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் தவிர, மற்ற நாட்களில் சந்திக்க இயலாத நிலை உள்ளது என்று அறிகிறேன். தலைமையகத்தில் நீங்கள் இருக்கும் நாட்களில் பொதுமக்களைச் சந்திப்பதற்கு பார்வையாளர்கள் நேரம் என ஒதுக்கி, அவர்களைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சாலை விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது நீங்களே களத்திற்குச் செல்ல வேண்டும். மக்களை மீட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு, அரசின் முகமாக, மக்களுக்கு உதவும் கரமாக நீங்கள் செயல்பட வேண்டும். நாடாளுமன்றth தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக உங்களது பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. பல்வேறு திட்டங்களைs செயல்படுத்தி வருகிறது. இவையனைத்தையும், எவ்வளவு விரைவாகவும், சிறப்பாகவும் நடத்தி கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு பேரும், மரியாதையும் கிடைக்கும். திட்டங்களின் சுணக்கமும் தவறு ஏற்படுமானால், அதன் மீதான விமர்சனம் எங்கள் மீதுதான் வரும். தேர்தல் என்பதால், மிக அதிகமாகவே வரும்.

உங்கள் கவனத்திற்கு வரும் புகாரை உடனடியாக களையுங்கள். அதை செய்தாலே விமர்சனங்கள் வராது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் தெரிவித்த ஆலோசனைகளும், கருத்துகளும் அரசின் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: செம்மண் அள்ளிய விவகாரம்.. ஜெயக்குமாரின் மனுவை ஏற்ற நீதிமன்றம்.. நெருக்கடியில் சிக்கிய பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.