ETV Bharat / state

முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் பவானி தேவி!

ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை பவானி தேவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

author img

By

Published : Aug 4, 2021, 12:48 PM IST

Bhavani Devi
பவானி தேவி

சென்னை: ஒலிம்பிக் வாள் சண்டையில் களமிறங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் பவானிதேவி. சென்னையைச் சேர்ந்த இவர், டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்றார்.

பவானி தேவி
பவானி தேவி

இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

நாட்டிற்காகப் பதக்கம் வெல்ல துடித்த பவானிதேவிக்கு, இந்தத் தோல்வி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தவே, தன் தோல்விக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பவானி தேவி
பவானி தேவி

முதலமைச்சருடன் சந்திப்பு

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரை இன்று சந்தித்து பவானி தேவி வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’நான் விளையாடியதைப் பார்த்ததாகவும், சிறப்பாக விளையாடினேன் என்றும் முதலமைச்சர் பாராட்டினார்.

பவானி தேவி பேட்டி

எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என நம்பிக்கை அளித்ததுடன் ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் முதலமைச்சர் வாழ்த்தினார். தற்போது மின்சார வாரியத்தில் பணியாற்றிவரும் எனக்கு அரசு பதவி உயர்வு அளிக்கும் என நம்புகிறேன்’’ என்றார் எதிர்பார்ப்புடன்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாள்வீச்சு வீராங்கனை நன்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.