ETV Bharat / state

அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவர் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் - அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன்

அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவர் சீனிவாசனின் மறைவு, மருத்துவ உலகிற்கு பேரிழப்பு என மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் மறைவுக்கு மு.க ஸ்டாலின் இரங்கல்

author img

By

Published : May 25, 2021, 4:48 PM IST

அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் சீனிவாசன் காலமானார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

'அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் சீனிவாசன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் சிறந்த கண் மருத்துவச் சேவையை வழங்கி வரும் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமியின் சகோதரரான சீனிவாசன், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர் ஆவார்.

சீனிவாசனின் மறைவு, மருத்துவ உலகிற்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அரவிந்த் கண் மருத்துவமனை குழும நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு, வெள்ளையை விட ஆபத்தாம் மஞ்சள் பூஞ்சை... தடுப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.