ETV Bharat / state

ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு பணிக்கொடை நிதி - முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் - பணிக்காலத்தில் இறந்த திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதி

ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசு தாரருக்கு பணிக்கொடை மற்றும் பணிக்காலத்தில் இறந்த திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

cm M K Stalin donated endowment funds to retired temple staff and heirs ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசு தாரர்களுக்கு பணிக்கொடை

author img

By

Published : Jun 28, 2022, 2:30 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில், இன்று (ஜூன்.28) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காலஞ்சென்ற திருக்கோயில் பணியாளர் ஒருவரின் வாரிசு தாரர் ஆகியோருக்கு ரூ.2,70,09,752 பணிக்கொடை வழங்கிடும் நிகழ்வு நடைபெற்றது.

அதன் அடையாளமாக 12 ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசு தாரர்களுக்கு பணிக்கொடையும், மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், வல்லக்கோட்டை-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் மாமல்லபுரம்-ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி, பணிக்காலத்தில் இறந்த 3 திருக்கோயில் பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்பநல நிதியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோரும், காணொலிக் காட்சியின் வாயிலாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை!

For All Latest Updates

TAGGED:

cm stalin
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.