தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை மூலமாகப் பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில்...
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் சண்முகசுந்தராபுரம் கிராமத்தின் அருகில் நாகலாறு ஓடையின் குறுக்கே இரண்டு கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை,
- போடிநாயக்கனூர் கிராமம் அருகில் சின்னாற்றின் குறுக்கே இரண்டு கோடியே ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை,
- மாணிக்காபுரம் கிராமத்தின் அருகில் சுத்தகங்கை ஓடையின் குறுக்கே ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை,
- ஈரோடு மாவட்டம் வேட்டைபெரியாம்பாளையம் கிராமம் அருகில் பவானி பிரிவு வாய்க்காலில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்
என மொத்தம் ஏழு கோடியே எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (பிப். 4) திறந்துவைத்தார். மேலும்...
- கடலூர் மாவட்டம் விஸ்வநாதபுரம் கிராமம் அருகே பெண்ணையாற்றின் குறுக்கே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை,
- மேல்குமாரமங்கலம் கிராமம் அருகே பெண்ணையாற்றின் குறுக்கே 37 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அணைக்கட்டு,
- கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் - மருதேரி பாலத்தின் அருகே பெண்ணையாற்றின் குறுக்கே 10 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள படுகை அணை,
- திருப்பத்தூர் மாவட்டம் இருனாப்பட்டு கிராமம் பாம்பாற்றின் குறுக்கே ஒரு கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை,
- விருதுநகர் மாவட்டம் வல்லம்பட்டி ஓடையின் குறுக்கே ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை,
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களின் அருகே மணிமுக்தா ஆற்றின் குறுக்கே எட்டு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நீர் செறிவூட்டு கட்டுமானம் அமைக்கும் பணி,
- தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை கிராமத்தில் 52 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தூண்டில் வளைவு,
- கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறையில் 14 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தூண்டில் வளைவு
என மொத்தம் 156 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான எட்டு திட்டப் பணிகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே. இராமமூர்த்தி, அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புதிதாக இன்று 494 கரோனா பாதிப்பு - நான்கு பேர் உயிரிழப்பு