பரபரப்பான தேர்தல் பரப்புரைகளுக்கு மத்தியிலும், இளைஞர்களைச் சென்றடைய எளிய வழி என்பதால், தலைவர்கள் சமூக வலைதளங்களிலும் தங்களை துடிப்புடன் வைத்துக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறித்த கருத்து ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், "ஸ்டாலின் தேர்தலுக்காக மக்களைச் சந்திக்கிறார். அவரைத் தேர்தலுக்குப் பிறகு உங்களால் நேரில் சென்று பார்க்க முடியாது. நான் உங்களில் ஒருவன். என்னை எப்போதும் சந்தித்து உங்களது குறைகளைக் கூற முடியும். வரும் ஆண்டுகளில் மக்களின் ஒருவனாகத் தமிழ்நாட்டை முன்னெடுத்துச் செல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.