உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் வெளியிடப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல் இருந்தது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது. இதில் நம் தமிழ் மொழி முதன்முறையாக இடம்பெற்றது. அதனை தமிழக வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள் வரவேற்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-க்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.