ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் இருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தது.
அதன் அடிப்படையில் ஓரிரு நாள்களில் ஆளுநர் விடுதலை குறித்து முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது ஏழு பேர் விடுதலை தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும் ஆளுநருடன் முதலமைச்சர் பேசினார்.