ETV Bharat / state

‘பாரம்பரிய உணவு முறைகளை கடைப்பிடியுங்கள்’ - முதலமைச்சர் அறிவுரை - chennai

சென்னை: தீவுத்திடலில் ‘மதராசபட்டினம் விருந்து’ என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாள் உணவு கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.

சிஎம்
author img

By

Published : Sep 13, 2019, 1:22 PM IST

சென்னை தீவுத்திடலில் ‘மதராசபட்டினம் விருந்து’ என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர், "நமது உணவு என்பது தற்பொழுது அலங்காரப் பொருட்களாக மாறிவிட்டது. நாம் ஆரோக்கியமான வாழ்வு வாழ நம் முன்னோர்கள் உட்கொண்ட உணவினை உட்கொள்ள வேண்டும். முன்பு நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து பின்னர் பசி எடுத்த பின் உணவு உண்ண வேண்டும். இதனைத் தவறாது கடைப்பிடித்தால் நோய் நம்மை அண்டாது.

கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

இப்போதெல்லாம் இளம் வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு நாம் உட்கொள்ளும் உணவு பழக்கமே காரணம். நமது அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவுப் பழக்கத்துடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அவருக்கு சர்க்கரை நோய் வந்தால் இனிப்புகளை முன்வைத்து பார்க்க முடியுமே தவிர சாப்பிட முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" எனப் பேசினார்.

Intro:பாரம்பரிய உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

Body:பாரம்பரிய உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
சென்னை,

சென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் விருந்து என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாட்கள் உணவு கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

சென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் விருந்து என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, நமது உணவு என்பது தற்பொழுது அலங்காரப் பொருட்களாக மாறிவிட்டது. நாம் ஆரோக்கியமான வாழ்வு வாழ நம் முன்னோர்கள் உட்கொண்ட உணவினை உட்கொள்ள வேண்டும்.
முன்பு நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து பின்னர் பசி எடுத்த பின் உணவு உண்ண வேண்டும். இதனைத் தவறாது கடைபிடித்தால் நோய் நம்மை அண்டாது.

இப்போதெல்லாம் இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு நாம் உட்கொள்ளும் உணவு பழக்க வழக்கமாகும். நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு வகைகளான சாமை தினை கம்பு கேழ்வரகு குதிரைவாலி போன்ற நவதானியங்களை உணவு பொருட்களாக உட்கொண்டாலும் அதற்கேற்ப உடலுழைப்பினை செய்ததால் அவர்களுக்கு ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மாரடைப்பு போன்றவை அரிதாக காணப்பட்டது.

நமது அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவு பழக்கத்துடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் உடற்பயிற்சி எவ்வாறு உடலுக்கு வலு சேர்க்கிறதோ அதுபோல் புத்துணர்ச்சியும் அளிக்கிறது.
மத்திய அரசு உணவு பொருட்கள் பாதுகாப்பு குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் சிறந்த நகரமாக மதுரையும் ,சிவகாசியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நமது மும்பை அவர்கள் முன்பெல்லாம் கேப்பைகளி, வரகரிசி சோறு, கம்பு தோசை தேன் கலந்த தினை மாவு போன்றவை உணவாக இருந்தது. இதனை சமைத்து உண்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நலமாக வாழ்ந்தனர்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் பொதுமக்கள் அதிகமாக கண்டுகளித்து பயனடைய வேண்டும். ஒருவருக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அவருக்கு சர்க்கரை நோய் வந்தால் இனிப்புகளை முன்வைத்து பார்க்க முடியுமே ஒழிய சாப்பிட முடியாது. ஆனால் சர்க்கரை நோய் ஏற்ற ஒரு ஏழை இனிப்புகளை தனது வயிறார உண்ணலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என பேசினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.