ETV Bharat / state

கைத்தறி நெசவாளர்களின் அகவிலைப்படி 10% உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை: "கைத்தறி நெசவாளர்களின் அகவிலைப்படியில் 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும்" என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 16, 2019, 5:42 PM IST

Updated : Jul 16, 2019, 7:17 PM IST

கைத்தறி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கைத்தறி, துணி நூல்துறை குறித்த புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். அந்த அறிவிப்பில், "கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் பெற்று வரும் அகவிலைப்படியில் 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், "விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை, சேலை ஒன்றுக்கு 39 ரூபாய் 27 காசில் இருந்து 43 ரூபாய் ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 21 ரூபாய் 60 காசில் இருந்து 24 ரூபாயாகவும் உயர்த்தப்படும். பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய் 67 காசில் இருந்து 90 ரூபாய் 29 காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசில் இருந்து 69 ரூபாய் 58 காசாகவும் உயர்த்தப்படும்.

அதேபோல், கூலி மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசில் இருந்து 12 ரூபாய் 16 காசாகவும் அரசால் வழங்கப்படும். இதனால் தமிழ்நாடு முழுவதும் 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்" என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Intro:
கைத்தறி நெசவாளர்களுக்கான ஊதியம் உயர்வு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Body:
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் கைத்தறி மற்றும் துணிநூல்துறை குறித்து புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நெசவாளர்கள் தற்பொழுது பெற்று வரும் அகவிலைப் படியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.

விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி , சேலை ஒன்றுக்கு 39 ரூபாய் 27 காசுகளில் இருந்து 43 ரூபாய் ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 21 ரூபாய் 60 காசுகளில் இருந்து 24 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி சேலை ஒன்றுக்கு 85 ரூபாய் 67 காசுகளில் இருந்து 90 ரூபாய் 29 காசுகளாகவும், வேட்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசுகளில் இருந்து 69 ரூபாய் 58 காசுகளாகவும் உயர்த்தி வழங்கப்படும். கூலி மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசுகளில் இருந்து 12 ரூபாய் 16 காசுகளாக அரசால் வழங்கப்படும்.இதனால் தமிழ்நாடு முழுவதும் 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித் தொழிலாளர்கள் பயன் அடைவர்.
தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நபார்டு வங்கியின் மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதனத்தை காசுக்கடனாக பெற்று வருகின்றன. அத்தகைய கடனுக்கு தற்பொழுது தமிழ்நாடு அரசு 4 சதவீதம் மானியமாக வழங்கி வருகிறது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை 2019 ல் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், வட்டிச் சுமையினைக் குறைக்கும் விதமாக தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இந்த சமய அறநிலையத்துறையின் கீழ், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 1,000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக நடப்பாண்டில் திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் திருக்கோயில் நிதியில் இருந்து வழங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 1000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணி மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக நடப்பாண்டில் திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி திருக்கோயில் நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்தார்.

Conclusion:
Last Updated : Jul 16, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.