வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் என்று 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "இளம் வழக்கறிஞர்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் பொதுமக்களுக்குப் பணியாற்றும் விதமாக அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கவேண்டும் என்று பார் கவுன்சில் கோரிக்கை விடுத்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் சரியான காலத்தில் நிறைவேற்றியுள்ளனர்.
மாதம்தோறும் மூவாயிரம் ரூபாய் உதவித் தொகையை இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்காக முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனதார நன்றித்தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உதவியை வழக்கறிஞர்கள் சமுதாயம் வாழ்நாள் முழுவதும் மறக்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், சட்டத்துறை அமைச்சருக்கும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு உயரடுக்கு துணை ராணுவப்படைகளில் பணிசெய்யும் வாய்ப்பு!