ETV Bharat / state

கரோனா பரிசோதனை:சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் மருத்துவ முகாம்கள்

சென்னை முழுவதும் மே மாதம் முதல் 49 ஆயிரத்து 595 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close to 50 thousand Medical Camps Done by Chennai Corporation

author img

By

Published : Sep 21, 2020, 2:38 AM IST

சென்னையில் கரோனா வைரஸ் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் சதவீதமும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மே 8ஆம் தேதி முதல் நேற்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 49 ஆயிரத்து 595 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 25 லட்சத்து 70 ஆயிரத்து 486 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவ முகாம்களில் மூலம் கரோனா பாதித்த 23 ஆயிரத்து 683 நபர்களை மாநகராட்சி கண்டறிந்துள்ளது.

நேற்று 358 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 47, திருவிக நகரில் 41 மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றைய 358 மருத்துவ முகாம்களில் மொத்தம் 9 ஆயிரத்து 596 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில் 654 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்றவாறு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்புத் தனித் தேர்வுக்குத் தடையில்லை - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.