சென்னை: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையில் நடைபெறும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் வருகைப் புரியாத மாணவர்கள் துணைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடத்தப்படுவதற்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ளார்.
அதில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 10.10 மணி வரையில் வினாத்தாள் படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரையில் விடைத்தாளில் தகவல்களை சரிபார்க்கவும், 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் தேர்வு எழுதுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.
அதன்படி, ''ஜூன் 19ஆம் தேதி - மொழித்தாள்;
ஜூன் 20ஆம் தேதி - ஆங்கிலம்;
ஜூன் 21ஆம் தேதி - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கை, கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
ஜூன் 22ஆம் தேதி - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்
ஜூன் 23ஆம் தேதி - கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்( பொது)
ஜூன் 24ஆம் தேதி - தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிக மேலாண்மை மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
ஜூன் 26ஆம் தேதி - வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் தேர்வுகள்'' நடத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - அமைச்சர் நாசர் நீக்கம்!