இது குறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று உச்ச நிலையை அடைந்து சுமார் 15 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை மாதம் நடத்த உள்ளதாக அட்டவணை வெளியிட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நீட் நுழைவு தேர்வு போன்றவை ஜூலை மாதம் நடக்க உள்ளன.
தேர்வு மதிப்பீட்டு மையத்திற்கு வரும் 80 விழுக்காடு ஆசிரியர்கள் பயணம் செய்வதில் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகளுக்கான பணிகள் தீவிரம்!