சென்னை: நேற்று (மே 15) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதிவு ஒன்றினை போட்டிருந்தார். தமிழ்த்தாய் என எழுதப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அப்பதிவில், “எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அண்ணாமலை வெளியிட்ட படத்தில் வட மொழி எழுத்து கலந்திருப்பதாக கூறி விமர்சித்தார்.
-
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார். pic.twitter.com/XjtVP1nGKq
— Thangam Thenarasu (@TThenarasu) May 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார். pic.twitter.com/XjtVP1nGKq
— Thangam Thenarasu (@TThenarasu) May 16, 2022தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார். pic.twitter.com/XjtVP1nGKq
— Thangam Thenarasu (@TThenarasu) May 16, 2022
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்.” என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!
"ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!” எனக் கூறியுள்ளார்.
-
"ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்.
— K.Annamalai (@annamalai_k) May 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
2/2
">"ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்.
— K.Annamalai (@annamalai_k) May 16, 2022
அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
2/2"ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்.
— K.Annamalai (@annamalai_k) May 16, 2022
அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
2/2
இவ்வாறு ’தமிழ் தாய்’ புகைப்படத்தை வைத்து டுவிட்டரில் மோதி வருவது அரசியல் மேடையில் பலரையும் கவனம் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழணங்கு என்னும் புகைப்படத்தினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட தமிழணங்கு கருப்பாகவும், அண்ணாமலை வெளியிட்ட தமிழணங்கு புகைப்படம் சற்று மாநிறமாக இருப்பதாகவும் ட்விட்டர்வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்து கட்டண உயர்வு என்பதில் உண்மை இல்லை - அமைச்சர் விளக்கம்