ETV Bharat / state

குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள் - மாஃபா பாண்டியராஜன்

சென்னை: பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்  தெரிவித்துள்ளார்.

ministers clean the road
author img

By

Published : Aug 24, 2019, 9:48 PM IST

சென்னை மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் 3.38 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடையாளம்பட்டு ஊராட்சியில் மாஸ் க்ளீனிங் திட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து சாலைகளை சுத்தம் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின், பூவிருந்தவல்லி, திருவேற்காடு போன்ற நகராட்சிகளையும், அயப்பாக்கம், அடையாளம்பட்டு, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Intro:பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்  தெரிவித்துள்ளார்Body:பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்  தெரிவித்துள்ளார்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் 3 . 38 லட்சம் மதிப்பில் குடிமராத்து பணி துவக்க விழா நடைபெற்றது.இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர்  கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். பின்னர்அடையாளம்பட்டு ஊராட்சியில் மாஸ் க்ளீங் திட்டத்தில் மாணவர்களுடன் இணைத்து இரண்டு அமைச்சர்களும் சாலைகளை வீதி வீதியாக சுத்தம் செய்தனர்.இதனை தொடர்ந்து பூவிருந்தவல்லி தாலுக்கா சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு மனுக்களை பெற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின் விரைவில் பூவிருந்தவல்லி, திருவேற்காடு போன்ற நகராட்சிகளையும்,அயப்பாக்கம், அடையாளம்பட்டு, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.இதில் பூவிருந்தவல்லி வட்டாட்சியர் புனிதவதி உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.