ETV Bharat / state

’இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

author img

By

Published : Apr 29, 2022, 11:08 PM IST

கச்சத் தீவை மீட்க, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் கோரிக்கை வைத்தார்.

கச்சத் தீவை மீட்க, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி

சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவிகளை மேற்கொள்ள சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். பின்னர் இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,

’’இந்த சூழ்நிலையில் நமக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விரைந்து நடத்தி, கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த அரசை வலியுறுத்துகிறேன்

மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தரவேண்டும் என்ற நமது கோரிக்கையும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதையும் இந்த அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தர வேண்டும்.
இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழக அரசின் சார்பில் அத்தியாவசியப் உணவுப் பொருட்களை இலங்கை வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு மத்திய அரசு உரிய அனுமதியினை வழங்க வேண்டும்.

இலங்கையில் வாழும் இந்திய மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு கொண்டு வந்த இந்த தனித் தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரிக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.