தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கிறிஸ்தவ பிரிவினர்களையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்களுக்கு, 2019-2020ஆம் ஆண்டுக்கான ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக நபர் ஒருவருக்கு மானியமாக 20 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம்.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலங்களிலும் கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் 30ஆம் தேதிக்குள் ’இயக்குநர், சிறுபான்மையினர் நல இயக்ககம், கலசமஹால், சேப்பாக்கம், சென்னை-5’ என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பித்துப் பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள் - கூகுள் டூடுல் நினைவூட்டும் அதன் பின்னணி என்ன?