சென்னை: வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் 50 வயது அப்துல்லாவின் மார்பு சுவரில் விலா எலும்பிலிருந்து ஒரு கட்டி உருவாகி வருவதாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது. 2020 டிசம்பரில் வங்காள தேசத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையும் செய்தனர். அப்போது இந்த கட்டி கான்ட்ரோஸ்கார்கோமா [chondrosarcoma] கட்டி என்பது கண்டறியப்பட்டு, அவரது முதல் மற்றும் இரண்டாவது இடது விலா எலும்பையும் சேர்த்து வங்கதேசத்து அறுவை சிகிச்சை மருத்துவர் அகற்றினார். ஆனாலும் மீண்டும் அவருக்கு கட்டி வளர்ந்தது
அவரது மார்பு சுவரில் உள்ள கட்டி பெரியதாகவும், பரவியதாகவும் காணப்பட்டது. அதில் முக்கியமாக கழுத்து பகுதிகள் மற்றும் இதயத்திலிருந்து செல்லும் முக்கிய நரம்புகள் ஆகியவை உள்ளன
சென்னை, அப்போலோ மருத்துவமனையின், சர்ஜிக்கல் ஆன்காலஜி மற்றும் ரோபோடிக் சர்ஜரி பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் அஜித் பை கூறும்போது, கட்டி மூன்று பகுதிகளாக காணப்பட்டது. ஒவ்வொன்றும் கழுத்து, மார்பு சுவர், மார்பின் உள்பகுதி ஆகியவற்றில் காணப்பட்டது. மேலும் இக்கட்டிகள் கழுத்து இதயம், நுரையீரல் உள்ளிட்டவற்றில் உள்ள முக்கிய பாகங்களை அழுத்திக் கொண்டிருந்தது. இதனால் நோயாளி சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார். மேலும் விழுங்குவதிலும் சிரமம் ஏற்பட்டதுடன், நெஞ்சில் வலியையும் உருவாக்கியது
அவரை பரிசோதனை செய்ததில், மார்பு சுவர், கழுத்தில் உள்ள மத்திய மார்பு எலும்பு, காலர் எலும்பு, விலா எலும்புகள், மார்பு மற்றும் கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் (aorta, carotid and subclavian Vessels) மூச்சு குழாய் (trachea) ஆகியவற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் குழு பிப்ரவரி 25 ந் தேதி நோயாளிக்கு 14 மணி நேர அறுவை சிகிச்சை செய்தனர்.
ஒரு சிறிய வலையில் (mesh) நிரப்பப்பட்ட எலும்பு சிமென்ட் மூலம் மத்திய பகுதி மார்பெலும்பு சரிசெய்யப்பட்டதுடன் ஒரு புதிய மார்பு சுவரும் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்: திறந்துவைத்த ஸ்டாலின் - மக்களுக்கு என்ன பயன்?