ETV Bharat / state

’சிதம்பரம் குரு நமச்சிவாய மூர்த்தி மடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன...’ உயர் நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : May 19, 2021, 3:28 PM IST

சென்னை: சிதம்பரம் குரு நமச்சிவாய மூர்த்தி மடத்துக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரு நமச்சிவாய மூர்த்தி மடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? - சென்னை உயர்நீதிமன்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள குரு நமச்சிவாய மூர்த்தி மடத்துக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான சொத்துகள் உள்ளதாகவும், இந்தச் சொத்துகளை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே.19) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 2018ஆம் ஆண்டு முதல் அரசுக்கு மனுக்கள் அனுப்பியுள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் ஏ.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளது, அதில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுக்களைப் பரிசீலித்து, ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தாமாக முன் வந்து, வழக்கில் விழுப்புரம் அறநிலையத்துறை இணை ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும், மடத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறநிலையத்துறை அலுவலர்களிடம் விவரங்களைப் பெற்று அறிக்கையாக தாக்கல் செய்யும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:வெறுமையாகும் மய்யம்: திருச்சி முருகானந்தம் விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.