ETV Bharat / state

குழந்தைகளிடையே ‘மாறுகண் , ஒன்றரைக் கண் மற்றும் கிட்டப்பார்வை’ பாதிப்பு அதிகரிப்பு

மொபைல், கணினித் திரையை தொடர்ந்துப் பார்ப்பதன் அபாயத்தால் குழந்தைகள் மத்தியில் ‘மாறுகண் , ஒன்றரைக் கண் மற்றும் கிட்டப்பார்வை’ பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : Aug 11, 2021, 11:05 PM IST

கிட்டப்பார்வை’ பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு அதிகரிப்பு

கோவிட்-19 பெருந்தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளில் சென்னையிலுள்ள டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனையில் மாறுகண் , ஒன்றரைக் கண் குறைபாடு காரணமாக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை (மையோப்பியா) பாதிப்பு சுமார் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வருடாந்திர அளவில் கிட்டப்பார்வை நேர்வுகளின் வளர்ச்சி, இயல்புக்கு மாறாக 100 சதவீதமாக உயர்ந்து உள்ளதாக சென்னை டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனையின், குழந்தைகளுக்கான முதுநிலை கண் மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார் தெரிவிக்கிறார்.

சூரிய ஒளி பற்றாக்குறை

வீட்டிற்கு வெளியே சூரியஒளி படுமாறு இல்லாததும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கை செயல்பாடுகள் மிகவும் குறைந்திருப்பதும், அதே நேரத்தில் குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், மொபைல், கணினி, டிவி ஆகியவற்றின் திரைகளைப் பார்க்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் இதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பாதிப்பு அதிகரிப்பு

ஆண்டுதோறும் “குழந்தைகளின் கண் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்று டாக்டர். மஞ்சுளா ஜெயக்குமார் உரையாற்றினார்.

அப்போது “பெருந்தொற்று நிலவும் காலகட்டத்தில் குழந்தைகள், சிறார்கள் மத்தியில் மாறுகண் , ஒன்றரை கண் பாதிப்பு நிகழ்வுகளின் எண்ணிக்கைமுன்பு முன் எப்போதும் காணப்படாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

சென்னையில், கோவிட்-19 தொற்றுக்கு முன்பு ஒரு ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு பாதிப்பு நேர்வுகளையே பார்த்திருக்கிறோம்; ஆனால், இன்றைக்கு பத்துக்கும் அதிகமான குழந்தைகள் இப்பாதிப்பினால் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த குறைபாடுகளுடன் வருவோரின் எண்ணிக்கை 25 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

இப்பாதிப்பிற்கான முக்கிய இடர்க்காரணிகளுள் கண்களுக்கும் மற்றும் நமது பார்வை செல்கின்ற பொருளுக்கும் இடைப்பட்ட தூரம் 33 செ.மீட்டருக்கும் குறைவாக இருக்கின்ற நிலையில், வாசிப்பது மற்றும் எழுதுவது போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து நீண்டநேரம் செய்வதும் ஒன்றாகும்.

மாறுகண் பாதிப்பு

WSPOS என்ற குழந்தைகளுக்கான கண் மருத்துவ சங்கத்தின்படி மிக அருகில் இவ்வாறு பார்வையை செலுத்துவது கிட்டப்பார்வையை ஏற்படுத்தும் மற்றும் மாறுகண் / ஒன்றரைக்கண் போன்ற நிலைகளுக்கு இட்டுச்செல்லும்.

பொதுமுடக்க காலத்தின்போது, “மிக அருகில் பார்வை செயல்பாடு” என்பதில் கல்வி சார்ந்த அல்லது பிற நோக்கங்களுக்காக கணினி, மடிக்கணினி, கைபேசி அல்லது டேப்லெட்களின் திரையை, அடிக்கடி இடைவேளையின்றி நீண்டநேரம், வைத்த கண் வாங்காமல் பார்ப்பது பொதுவான ஒரு நிகழ்வாகும்.

இதனால் கண்ணுக்கு ஏற்படும் அழுத்தம், கண்ணை சுருக்கிப் பார்ப்பதற்கு வழிவகுக்கும்; கிட்டப்பார்வை பாதிப்பு வளர்ச்சியடைவதை துரிதமாக்கும் விளைவை இது ஏற்படுத்தும். புத்தகங்கள், தாள் வடிவிலான பிற பொருட்கள் மட்டுமின்றி, வெளிச்சத்தை உமிழ்கின்ற டிஜிட்டல் சாதனங்களும், கிட்டப்பார்வை வளர்ச்சியடைவதற்கு சமஅளவில் இடர்வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால், வெளிச்சத்தை உமிழும் டிஜிட்டல் சாதனங்கள், உலர்கண் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க இயலாத நிலை போன்ற பிற பிரச்னைகளையும் கூடுதலாக ஏற்படுத்துகின்றன.

“கணினி திரைக்கு முன்பாக அல்லது மொபைல் போனுக்கு முன்பாக இடைவேளையின்றி ஒரு குழந்தை ஒரு மணி நேரம் செலவிடுமானால், அடிக்கடி இடைவேளை எடுத்துக்கொண்டு, 3 மணி நேரம் இதே செயல்பாட்டை மேற்கொள்ளும் குழந்தையை விட, கண் தொடர்பான சிக்கல்களும், பாதிப்புகளும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே இதன் அர்த்தமாகும்,”

மடிக்கணினி

ஆன்லைன் முறையிலான வகுப்புகளைத் தவிர்க்க இயலாதபோது, மொபைல் போன்களுக்குப் பதிலாக, மடிக்கணினி கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் செய்யவேண்டும். ஏனெனில், மொபைல் போன் திரையோடு ஒப்பிடுகையில், இந்த டிஜிட்டல் சாதனங்களிலிருந்து கண்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருக்கும்.

சாத்தியமானால், வீட்டிற்கு வெளியே ஒரு நாளில், 1 முதல் 2 மணி நேரம் விளையாடுவதன் மூலம், சூரியஒளி உடலில் படுவதை உறுதிசெய்வது முக்கியம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கிட்டப்பார்வை பாதிப்பு வளர்ச்சியைத் தடுப்பதற்கான தீர்வுகளுள், குறைந்த மருந்தளிப்பு அளவுள்ள அட்ரோப்பின் கண் சொட்டுமருந்து, புராக்ரசிஸ் சேர்க்கை லென்ஸ்கள், பல்குவிய கண்ணாடிகள், ஆர்த்தோகெரட்டாலஜி மற்றும் ஆர்ஜிபி கான்டாக்ட் லென்ஸ்கள் போன்ற சிறப்பு கான்டாக்ட் லென்ஸ்கள் ஆகியவை இருக்கின்றன.

ஆனால், தீவிர மாறுகண் பாதிப்பு ஏற்படுமானால், அதை முந்தைய இயல்பு நிலைக்கு மாற்ற இயலாது. ஆகவே, பைனாக்குலர் விஷன் என அழைக்கப்படும் நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு மாறுகண் பார்வைக்கான (ஸ்ட்ராபிஸ்மஸ்) அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்.

கண்புரை

தீவிர கிட்டப்பார்வை பாதிப்பானது, வேறுபல சிக்கல்களையும் கொண்டுள்ளது. விரைவில் கண்புரை உருவாவது, திறந்த – கோண கண் அழுத்தநோய், கருவிழி விடுபடல், கடுமையான, சரிசெய்ய இயலாத பார்வைத்திறனை பாதிக்கின்ற நிலை ஆகியவை அடங்கும்.

கிட்டப்பார்வை வளர்ச்சி என்பது, பாதிப்பிற்கு ஆளாகும் நபருக்கும், நாட்டுக்கும் ஒரு பொருளாதார சுமையாகவும் இருக்கிறது. சூழல் மாற்றங்களை செய்வதன் மூலம் கிட்டப்பார்வை வளர்ச்சியைக் குறைக்க கண் மருத்துவர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.

இதையும் படிங்க :பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.