ETV Bharat / state

17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு- போக்சோவில் இளைஞர் கைது - சென்னை ஆவடியில் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு

சென்னை ஆவடி அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

child abuse aquest arrest  child abuse aquest arrest in chennai  child abuse  sexual harassment  chennai news  chennai latest news  பாலியல் வன்புணர்வு  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னையில் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னை ஆவடியில் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சென்னை செய்திகள்
சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு
author img

By

Published : Jul 23, 2021, 2:10 PM IST

சென்னை: ஆவடி அடுத்த மோரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 16ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானார். அவரது பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது போரூர், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்து (29) சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், மோரையில் பதுங்கி இருந்த முத்துவை காவல் துறையினர் நேற்று (ஜூலை 22) மாலை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து 17வயது சிறுமியை மீட்டனர். பின்னர், இருவரையும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, முத்துவிற்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளன என்பதும், இதற்கிடையில் முத்து தனது உறவினரான சிறுமியிடம் பழகி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி திருப்பதிக்கு கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்து, அங்கு வாடகைக்கு ஒரு அறை எடுத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

காவல் துறையினர் தேடுவதை அறிந்த முத்து சிறுமியை மோரையில் உள்ள வீட்டிற்கு கொண்டு விட வந்துள்ளார். அப்போது முத்துவை காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். பின் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: லேப்டாப் திருட்டு- சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.