ETV Bharat / state

கோழியின் தோலுரிக்கும் மிஷினில் மின்சாரம் பாய்ந்து கறிக்கடை ஊழியர் பலி! - worker died due to electric shock

சென்னை: வண்ணாரப்பேட்டையில் கறிக்கடையில் பணியாற்றி வந்த 65 வயதான முதியவர், மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிக்கன் கடை
chiken shop
author img

By

Published : May 21, 2021, 7:08 AM IST

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பார்த்தசாரதி மெயின் தெருவைச் சேர்ந்தவர் முகமது நஷீத். இவர், 'பெஸ்ட் மட்டன் சிக்கன்' ஸ்டாலில் கடந்த 10 நாட்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடையில் கோழி இறகுகளை சுத்தம் செய்யும் இயந்திரத்தை நீர் ஊற்றி கழுவி கொண்டிருந்த அவர், தவறுதலாக சுவிச்சை ஆன் செய்துள்ளார்.

அப்போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கால் கறி கடையில் தற்காலிகமாகப் பணிபுரிய சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.