ETV Bharat / state

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: தலைமைச் செயலர் நேரில் ஆஜராக விலக்கு - தலைமை செயலாளர் நாளை நேரில் ஆஜராக விலக்கு

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்காத வழக்கில் தலைமைச் செயலர் நாளை (டிசம்பர் 16) நேரில் முன்னிலையாக விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் தலைமை செயலாளர் ஆஜராக விலக்கு

author img

By

Published : Dec 15, 2021, 4:12 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல்செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி தலைமைச் செயலர் இறையன்பு சார்பில் தாக்கல்செய்த அறிக்கையில், நீதிமன்றம் கோரிய எந்த விவரமும் இல்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டிசம்பர் 16ஆம் தேதி தலைமைச் செயலர் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

தலைமைச் செயலர் முன்னிலையாக விலக்கு

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் முன்னிலையாகி தலைமைச் செயலர் இறையன்புவின் அறிக்கையைத் தாக்கல்செய்தார்.

313 தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எனவே தலைமைச் செயலர் முன்னிலையாக வேண்டுமென்ற உத்தரவிற்கு விலக்கு அளிக்க வேண்டுமெனவும் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், தலைமைச் செயலர் முன்னிலையாக வேண்டுமென்ற உத்தரவிலிருந்து விலக்கு அளித்தனர். மேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள முகவரியையும் நாளை (டிசம்பர் 16) தாக்கல்செய்ய நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: வருண் சிங் காலமானார்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.