தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி, பள்ளி, திரையரங்கம், பொழுதுபோக்கு பூங்கா ஆகியவை மூடப்பட்டிருக்கின்றன.
மேலும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தலைமைச் செயலர் சண்முகம், அனைத்து சமயத் தலைவர்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் திறப்பு குறித்து நடைபெற உள்ள ஆலோசனையில் பங்கேற்க கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும்பொருட்டு, பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய வழிபாட்டுத் தலங்களை ஜூன் 8ஆம் தேதிமுதல் திறக்கலாமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் கரோனா தொற்றின் நிலையை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் சமய வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (ஜூன் 3) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அக்கடிதத்தில் கேட்க்கொண்டுள்ளார்.
சமயத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் நாளை ஆலோசனை - தலைமைச் செயலாளர்
சென்னை: சமயத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.