கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் சண்முகம் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகள் வரன்முறைப்படுத்துதல், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு காப்பீடு திட்டம் வழங்குதல், கிராமப்புறம் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வீடு கட்டும் திட்டம், ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், நிவர் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என அறிவித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும், பாதிக்கப்படக்கூடிய பகுதியில் உள்ள மக்களை சரியான நேரத்தில் வெளியேற்றி, பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாகவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பது, அத்தியாவசிய பொருட்களை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வறுமையால் வாய்ப்பிழந்த மாணவிகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றிய அரசு