ETV Bharat / state

பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் தலைமையாசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது - தலைமைச்செயலாளர் உத்தரவு

பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் நிதி வசூலிக்க கூடாது என தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் தலைமையாசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது -  இறையன்பு உத்தரவு

author img

By

Published : Jun 9, 2022, 12:29 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதில், "பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தி மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற உற்ற சூழ்நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகங்கள் தூய்மைபடுத்தப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தி வண்ணம் பூசும் பணிகளை மேற்கொள்வதுடன் வகுப்பறைகளில் கரும்பலகைக்கு வண்ணம் பூசுதல், நாற்காலிக்கு வர்ணம் பூசுதல், மைதானங்களை தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மூடப்பட்டு இருக்கும் நிலையில், சேர்ந்து இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகங்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும். பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் தலைமையாசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது.

தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்

பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்ட விவரங்களை சேகரித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை அளிக்க வேண்டும்" என இறையன்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.