ETV Bharat / state

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை தலைமைச்செயலாளர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 2, 2022, 10:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (அக். 1) தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலாளர் இறையன்பு, திருவான்மியூர் எல்.பி. சாலை கால்வாயில் நீர்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகள், ஜாஃபர்கான்பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள், வால்டாக்ஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து மேயர் பிரியா, தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் பேசின் பாலம் கால்வாயில் தூர்வாரும் பணிகள், கொடுங்கையூர் கால்வாயில், தூர்வாரும் பணிகள் மற்றும் ரங்கா சாலையில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: மாலத்தீவு கடலில் கடல் சீற்றம்... தமிழ்நாடு மாலுமி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.