தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அலுவலர்களுடன் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இதில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார், சி. விஜயபாஸ்கர், துரைகண்ணு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்துதல், அணைகளுக்கு வரும் நீர்வரத்தினை கண்காணித்தல், கரையோர மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நோய் தொற்று ஏற்படாமல் தடுத்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விவசாய நில பாதிப்புகளை கண்காணிப்பது, மின்சார இணைப்புகள் தொடர்பான பிரச்னைகளை உடனடியாக தீர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொழில்துறைக்கு வழிகாட்ட 'தொழில் நண்பன்' இணையதளம் - தொடங்கி வைத்த முதலமைச்சர்!