சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு இன்று (செப். 28) ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, முதலில் வடசென்னையில் எழும்பூர் காந்தி இர்வின் சாலை, ஜோதி வெங்கடாசலம் சாலை, பூந்தமல்லி சாலை சந்திப்பில் நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வுசெய்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலை, கொன்னூர் சாலை, கொளத்தூர் பாபா நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் கால்வாய் பணிகளை ஆய்வுசெய்தார்.
பின்னர், பாடி பிரிட்டானியா நகர் பகுதியில் நடைபெற்றுவரும் 40 அடி சாலைப் பணி, புழல் உபரி நீர் வெளியேறும் அமில்லவாயல் பகுதியில் அமைந்துள்ள கால்வாய் தூர்வாரும் பணி, கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்களும், அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.