ETV Bharat / state

தனியார் நாளிதழ் புகைப்பட கலைஞர் மரணம்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! - kv srinivasan death

சென்னை தனியார் நாளிதழ்(தி இந்து) புகைப்பட கலைஞர் கே.வி. சீனிவாசன் இன்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Etv Bharatதனியார் நாளிதழ் புகைப்படகாரர் குடும்பத்திற்கு நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jan 2, 2023, 2:57 PM IST

சென்னை: தனியார் நாளிதழ் புகைப்பட கலைஞர் கே.வி. சீனிவாசன்(56) இன்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தி இந்து (The Hindu) ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.சீனிவாசன் (வயது 56), இன்று (02.01.2023) அதிகாலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த கே.வி.சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Supreme Court: பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.