ETV Bharat / state

"பதவியை பொறுப்பாகப் பாருங்கள்"- முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : May 7, 2022, 8:36 PM IST

பதவியைப் பதவியாகப் பார்க்காதீர்கள், பொறுப்பாகப் பாருங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.

chief-minister-stalin-speech-in-today-assembly
"பதவியைப் பதவியாகப் பார்க்காதே ,பதவியைப் பொறுப்பாகப் பார்"- முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் பேச்சு.

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வெளியிட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”நாட்டு மக்களுக்காக பல திட்டங்களை அறிவித்திருக்கிறேன். எதிர்க்கட்சி வரிசையில், முன்வரிசையிலே உட்கார்ந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர்கள், உறுப்பினர்கள் மிகச் சிறப்பான வகையிலே அதனை வரவேற்று எனக்கு வாழ்த்துச் சொல்லி, இந்த அரசுக்குப் பாராட்டைத் தெரிவித்து உரையாற்றியிருக்கிறீர்கள். அப்படி வாழ்த்திய அத்தனைப் பேருக்கும் நான் இதயபூர்வமான நன்றியை அரசின் சார்பிலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பதவி அல்ல பொறுப்பு: இந்த முதலமைச்சர் பதவி என்பது, என்னைப் பொறுத்தவரையில், எனக்கு நானே அடிக்கடிச் சொல்லிக்கொள்வது, ‘பதவியைப் பதவியாகப் பார்க்காதே – பொறுப்பாகப் பார்; அப்போதுதான் பொறுப்போடு பணியாற்ற முடியும்’ என்று என்பதுதான். இதை தலைவர் கலைஞர் எனக்கு அடிக்கடி அறிவுரை சொல்லியிருக்கிறார்.

உங்களில் ஒருவனாக கடமையாற்றுவேன்: இந்த இடத்திலே முதலமைச்சராக இருந்து, ஆட்சியை நடத்தி, சமுதாயத்திற்காக, நாட்டிற்காக உழைத்திருக்கக்கூடிய பெருந்தலைவர் காமராசராக இருந்தாலும், பேரறிஞர் அண்ணாவாக இருந்தாலும், தலைவர் கலைஞராக இருந்தாலும் அவர்களுடைய இனிய நண்பராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருந்தாலும், அவர்களெல்லாம் ஆற்றியிருக்கக்கூடிய அந்தப் பணிகளை நான் ஒருக்காலும் மறந்திடமாட்டேன். ஆகவே, அவர்கள் வழிநின்று என்றைக்கும் நான் என்னுடைய கடமையை ஆற்றுவேன். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ‘உங்களில் ஒருவனாக’ இருந்து என்னுடைய கடமையை ஆற்றுவேன். எனவே, வாழ்த்திய அத்தனை பேருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி" என்றார்.

இதையும் படிங்க: வீடுகளை அகற்றும் பணிகளை நிறுத்துக..! முதலமைச்சருக்கு மூத்தத் தலைவர் நல்லகண்ணு கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.