தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 14ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. இச்சூழலில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது.
அப்போது அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயமுகார் பேசுகையில், “ ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை படித்து பார்த்தோம். ஒரு பூனை எலியை தன் வாயிலை கவ்வுகிறபோதும் அதே பூனை தன் குட்டியை கவ்வுகிறபோதும் உள்ள வேறுபாடு உள்ளது அதே தாய்பாசத்தோடு எங்கள் பணி இருந்தது. 2011 ஆம் ஆண்டு 1 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. அது இந்த அவை குறிப்பில் உள்ளது என்றார்.
அவருக்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பணத்தின் மதிப்பு வருடத்திற்கு ஏற்றவாறு குறைந்துக்கொண்டே செல்கிறது. பணவீக்கத்தை உள்வாங்கியே கணக்கு போட்டுள்ளோம், வளர்ச்சி திட்டம் அப்படி அல்ல. வெள்ளை அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளோம்.
அதிமுக ஆட்சியில்தான் பண வீக்கம்
2006ஆம் ஆண்டு 7 விழுக்காடாக இருந்த பணவீக்கம் , கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 10% இருந்தது, ஆனால் கடந்த அதிமுக ஆட்சி 27% உயர்த்திவிட்டு சென்றுவிட்டனர். அறிவித்ததை எல்லாம் செயல்படுத்தியது என்று நினைக்க கூடாது
கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்காமல் 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்கள் அறிவித்து உள்ளனர். இதற்கு திமுக சார்பில் விளக்கம் அளிக்க உள்ளோம், செயல்திறன் குறைந்ததால் வந்த வினை இது என்றார்.
உதயகுமாரை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை, அனைத்து இல்லதரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ஏன அறிவித்துவிட்டு இப்போது ஏழை குடும்பத்தரசிகளுக்கு மட்டுமே 1000 என அறிவித்துள்ளீர்கள். தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு தற்போது ஒரு பேச்சு என்றார்.
இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபானி, ஏழை இல்லதரசிகளுக்கு மட்டும் அல்ல, தகுதியுள்ள அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
முதலமைச்சர் பேச்சு
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் சென்னையில் மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை செய்யவில்லை.
ஆவின் பால் பாக்கெட் ரூ 25க்கு வழங்கப்படும் என கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டது. ஆனால் அதை நிறைவேற்றவில்லை. ஏழைகளுக்கு அம்மா மினரல் வாட்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு அதையும் நிறைவேற்றவில்லை.
அதுபோல் அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் நாங்கள் விடமாட்டோம். நகை கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடுகள் எல்லாம் சரி செய்த பின்னர் உறுதியாகக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பண்ணை மகளிர் குழு, சிறப்பு வணிக வளாகம் அனைத்து பொது இடங்களிலும் வைஃபை வசதி அமைக்கப்படும். உரிய நேரத்தில் நிதி பற்றாக்குறை சரிசெய்து அனைத்து திட்டங்களும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும்” என்றா.