கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005இன் கீழ், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி இரவு 12 மணி வரை 12 நாள்களுக்கு, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அதேபோன்று சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் வீட்டிற்கே சென்று நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதை செயல்படுத்தும் விதமாக வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முறைகேடுகளை அம்பலப்படுத்திய காவல்துறை அலுவலர் இடமாற்றம்!