ETV Bharat / state

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவு! - chennai latest news

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் உத்தரவு
முதலமைச்சர் உத்தரவு
author img

By

Published : Oct 4, 2021, 7:58 PM IST

சென்னை : தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து இன்று(அக்.04) ஆய்வினை மேற்கொண்டார்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, செப்டம்பர் 30ஆம் தேதி அன்று முடிவடைந்த 2020-2021 காரிப் சந்தைப் பருவத்தில் 44.90 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த காரிப் பருவத்தில் 12.50 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்குக் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக இந்தக் கொள்முதல் விவசாயிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதை உறுதி செய்வதற்காக ஆன்லைன் முறையிலும் பதிவு செய்து, நெல்லைக் கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக திறக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையம்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கும் காரிப் 2021-2022 சந்தைப் பருவத்தில் இதுவரை 752 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில், 608 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் 2 கொள்முதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், விவசாயப் பெருமக்கள் பயனடையும் வகையில் இந்த ஆண்டு T4 நேரடி நெல் 2 கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், விவசாயப் பெருமக்கள் பயனடையும் வகையில் இந்த ஆண்டு 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ளன.

ஈரப்பதத்தின் அளவை உயர்த்த நடவடிக்கை

மேலும் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இல்லாத வகையில், எதிர்பாராத அளவிற்கு , இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியிலும், அக்டோபர் முதல் வாரத்திலும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரக்கூடிய நிலையில், நெற் பயிர்களும், நெல் மூட்டைகளும் ஈரம் அடைந்துள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை உயர்த்துவதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணப் பட்டுவாடாவை விவசாயிகளுக்கு எவ்வித காலதாமமுமின்றி வழங்கிட வேண்டுமெனவும், டெல்டா மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக மாவட்டங்களுக்குச் சென்று இந்த நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து, எவ்வித தடங்கலுமின்றி கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அரசாணை வெளியிட்ட மறுநாளே செயல்படுத்திய முதலமைச்சர்...! என்ன தெரியுமா.?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.