கோமுகி நதி அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 2020-2021ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழைய பாசன நிலங்கள் 5 ஆயிரத்து 860 ஏக்கர், புதிய பாசன நிலங்கள் 5 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 10 ஆயிரத்து 860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு கோமுகி நதி அணையிலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் உடனான கூட்டத்தை புறக்கணித்து ஓபிஎஸ் திடீர் ஆலோசனை!