ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை நன்றாக உள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன் - monkey pox tracing in airport

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை நன்றாக உள்ளது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படியே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வில் இருக்கிறார் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை நன்றாக உள்ளது

author img

By

Published : Jul 17, 2022, 11:02 AM IST

சென்னை: அறிஞர் அண்ணா சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று (ஜூலை 16) ஆய்வு செய்தார்.

அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "குரங்கு அம்மை நோய், விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகையான வைரஸ் மூலமாக ஏற்படுகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு, பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் பரவுகிறது.

ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு சுவாச காற்றில் நீர் திவளைகள் மூலமாகவோ, பாதிக்கப்பட்டவரின் உடல்திரவம் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபர்கள் அணியும் உடையை அணிவதன் மூலமாகவோ பரவும். குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தடிப்பு, கொப்பளம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து 86 விழுக்காட்டினரும், அமெரிக்க நாடுகளில் இருந்து 11 விழுக்காட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் இந்நோய் பரவலை உலக அளவிலான மிதமான ஆபத்து நிலை என அறிவித்துள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பு

குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அறிதல் (Contact Tracing), பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், கிருமி தடுப்பு நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றில் பன்னாட்டு விமான நிலையங்களில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை பன்னாட்டு விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்நோய் உள்ளதா என்று பரிசோதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 22ஆம் தேதி முதற்கொண்டு, தமிழ்நாடு பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா மற்றும் குரங்கு அம்மை நோய்க்கான காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மட்டும் 3 லட்சத்து 67 ஆயிரத்து 388 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் குழந்தைகளுக்கான புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் தடுப்பூசி பிரிவு அமைத்தும், குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தியும், அவ்வார்டுகளில் சிறப்பு மருத்துவர்களை பணியில் ஈடுபடுத்தி கவனமுடன் செயல்பட வேண்டும் என அனைத்து சுகாதார பணிகள் இணை இயக்குநர்களுக்கும், மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கும், குரங்கு அம்மை தொற்றின் அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அவர்களின் மாதிரிகளை (Samples) சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் மூலம் பூனே, தேசிய வைராலஜி நிலையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தல் படியே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வில் இருக்கிறார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 2,340 பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.