ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் இன்று தாக்கல் செய்கிறார்! - முதலமைச்சர் பழனிசாமி

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவை முதலமைச்சர் பழனிசாமி இன்று (பிப்.04) தாக்கல் செய்கிறார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்
author img

By

Published : Feb 4, 2021, 10:16 AM IST

இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 2ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு நேற்றைய தினம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய பேரவை கூட்டம்

இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது விவாதம் தொடங்க உள்ளது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர். நாளையும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிந்ததும் அதற்கான பதிலுரை நிகழ்த்தப்படும். அன்றே சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவை முதலமைச்சர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே அவசர சட்டம் மூலம் தடை செய்யப்பட்ட நிலையில் பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்ததால் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்ததையடுத்து 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதையும் படிங்க:பொங்கல் பரிசு பணத்தில் ஆன்லைன் ரம்மி - தோற்றதால் கல்லூரி மாணவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.