ETV Bharat / state

கரோனா தொற்றில் முதலிடம்: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று ஆலோசனை! - TN lockdown extension

சென்னை: தமிழ்நாட்டில் அமலில் உள்ளமுழு ஊரடங்கு நாளை மறு தினம் நிறைவடையும் நிலையில், அதனை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று(மே.22) ஆலோசனை நடத்துகிறார்.

mk
மு.க ஸ்டாலின்
author img

By

Published : May 22, 2021, 9:28 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கரோனா பரவல் வேகம் குறைந்தப்பாடில்லை. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும், 36 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கடந்த மூன்று நாள்களாக, கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி வருகிறது. இதைக் குறிப்பிட்டு, ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மருத்துவ நிபணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு நாளை மறுநாள் (மே.24) முடிவடைய இருக்கிறது. இந்தநிலையில் மருத்துவக் குழு, சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே.22) காலை 10மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கிறார்கள்.

இதில், ஊரடங்கை நீட்டிப்பதா, அப்படி நீட்டித்தால் என்னென்ன கட்டுபாடுகள் விதிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.