ETV Bharat / state

ரிவால்டோ யானையால் வனப்பகுதியில் வசிக்க முடிகிறதா? - சென்னை உயர் நீதிமன்றம் - சென்னை மாவட்ட செய்திகள்

இரண்டாவது முயற்சியில் காட்டுக்குள் விடப்பட்ட ரிவால்டோ யானை வனப்பகுதியிலேயே இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை
author img

By

Published : Aug 13, 2021, 2:49 PM IST

சென்னை: தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதனை சமீபத்தில் காட்டில் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்துவிட்டது.

அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரி இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஆகஸ்ட்13) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வனத்துறை பதில்

அதில், ரிவால்டோ யானையை காட்டுக்கு அனுப்பும் முதல் முயற்சி தோல்வியடைந்த போதும், இரண்டாவது முயற்சியாக அது காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. இதுவரை யானை காட்டிலேயே இருக்கிறது, ஆரோக்கியமாக இருக்கிறது. அதன் நடமாட்டத்தை 30 வனத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரிவால்டோ யானையால் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடிகிறதா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: புதிதாக 10 கல்லூரிகள், சித்தா பல்கலைகழகம்: தமிழ்நாடு பட்ஜெட்டில் உயர்கல்வி குறித்த அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.