ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட்: தோல்வியே சந்திக்காத இந்திய ஓபன் ‘பி' அணி அர்மேனியாவிடம் வீழ்ந்தது!

author img

By

Published : Aug 4, 2022, 7:44 AM IST

செஸ் ஒலிம்பியாட்டில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய ஓபன் ‘பி’ அணி, அர்மேனியாவுடன் தோல்வியுற்றது. இதனால் அர்மேனியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: தோல்வியே சந்திக்காத இந்திய ஓபன் ‘பி' அணி அர்மேனியாவிடம் வீழ்ந்தது!
செஸ் ஒலிம்பியாட்: தோல்வியே சந்திக்காத இந்திய ஓபன் ‘பி' அணி அர்மேனியாவிடம் வீழ்ந்தது!

சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது, இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஓபன் A Vs உஸ்பெகிஸ்தான் : ஹரிகிருஷ்ணா - அப்டு சட்டோரோவ் விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹரி, 34 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து விதித் சந்தோஷ் - யக்குபோவ் ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விதித், 60 வது நகர்வில் ஆட்டத்தை சமன் செய்தார்.

தொடர்ந்து அர்ஜூன் எரிகேசி - ஜவோகிர் சிண்டாரோவ் விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 49 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமனில் முடித்தார். அடுத்தாக சசிகிரண் - சாம்சித்தின் ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய சசி, 74 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார்.

இதன் மூலம் 2-2 என்ற புள்ளிக் கணக்கில் போட்டி சமன் செய்யப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து வழங்கப்படும்.

ஓபன் B Vs அர்மேனியா : முதலில் குகேஷ் - கேப்ரியல் சரிகிஸ்ஸான் விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 41 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்ததாக சரின் நிஹால் - ராண்ட் மேல்கும்யான் ஆட்டத்தின்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சரின், 30 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார்.

இதனையடுத்து விளையாடிய அதிபன் பாஸ்கரன் - சாம்வேல், வெள்ளை நிற காய்களை வைத்து, 40 வது நகர்த்தலில் அதிபன் தோல்வியைத் தழுவினார். அடுத்ததாக ரவுணக் சத்வானி - ராபர்ட் ஹோவ்கன்னிஸ்யன் விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ரவுணக், 51 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார். இதனால் 2.5-1.5 புள்ளிக்கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

ஓபன் C Vs லிதுனியா : சூர்யா சேகர் - டிடாஸ் ஸ்ட்ரீமா விசியஸ் ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய சூர்யா, 47 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். அதன் பின்னர் சேதுராமன் - கரோலிஸ் ஜக்ஸ்டா விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சேது, 42 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து அபிஜித் குப்தா - புல்டின் எவிசியஸ் ஆடிய ஆட்டத்தின்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அபிஜித், 44 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பின்பு அபிமன்யு புராணிக் - வேலெரி கசகவுஸ்கி களமாடும்போது, கருப்ப நிற காய்களுடன் களமிறங்கிய அபி, 43 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி அடைந்தது.

இந்திய மகளிர் A Vs ஜியார்ஜியா : கொனெரு ஹம்பி - நானா களமாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய 42 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து ஹரிகா துரோணோவள்ளி - நினோ பட்சியாஸ்விலி ஆடுகையில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வள்ளி, 33 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார்.

பின்னர் வைஷாலி - லெலா ஜவாகிஸ்விலி களமாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வைஷாலி, 36 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அதேபோல் தானியா சச்தேவ் - சலோமி மெலியா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய தானியா, 35 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். இதனால் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய பெண்கள் A அணி வெற்றி பெற்றது.

மகளிர் B Vs செக் குடியரசு : வந்திகா அகர்வால் - ஜூலியா மாவ்செசியான் ஆடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய வந்திகா, 53 வது நகர்த்தலில் போட்டியை சமனில் முடித்தார். அதன் பின்னர் பத்மினி ரவுட் - ஜோன்னா வோரெக் ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பத்மினி, 41 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார்.

மேரி அன் கோம்ஸ் - கரோலினா பில்சோவா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய மேரி, 41 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். அதேபோல் திவ்யா தேஷ்முக் - க்றிஸ்டினா பெட்ரோவா விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 75 வது நகர்த்தலில் போட்டியை சமனில் முடித்தார்.

இதன் மூலம் 2-2 என்ற புள்ளி கணக்கில் போட்டி சமன் செய்யப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் 0.5 புள்ளிகள் வழங்கப்படும்.

மகளிர் C Vs ஆஸ்திரேலியா : முதலில் ஈஷா கரவாடே - ஜூலியா ரிஜானோவா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஈஷா, 30 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். பின்னர் நந்திதா - ஹேதர் ரிச்சார்ட்ஸ் விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய நந்திதா, 83 வது நகர்த்தலில் போட்டியை சமனில் முடித்தார்.

தொடர்ந்து சாஹிதி வர்ஷினி - குயென் மாய்சி களமாடியபோது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சாஹிதி, 69 வது நகரத்தலில் வெற்றி பெற்றார். அதேபோல் விஷ்வா வஷ்ணவாலே - ஜியாங் குயென் களம் காணும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விஷ்வா, 97 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார். இதன் மூலம் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 44 வது செஸ் ஒலிம்பியாட்: 5 வது சுற்று நிலவரம் - பிரக்ஞானந்தா பின்னடைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.