ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட்: 10-வது சுற்றில் இந்தியாவின் வெற்றி! - India

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: 10 வது சுற்றில் இந்தியாவின் வெற்றி!

author img

By

Published : Aug 9, 2022, 6:49 AM IST

சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 10-வது சுற்றின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய ஓபன் ஏ Vs ஈரான் ஹரிகிருஷ்ணா - பஹாரம் விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹரி, 60 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார். அடுத்ததாக விதித் சந்தோஷ் - அமின் விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விதித், 52 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து அர்ஜூன் எரிகேசி - போயா இடானி ஆடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 30 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். நாராயணன் - பார்டியா டேனேஷ்வர் ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய நாராயணன், 90 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார். இதனால் 2.5-1.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய ஓபன் பி Vs உஸ்பெகிஸ்தான் குகேஷ் - நோடிர்பெக் களமாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 72 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார். மேலும் சரின் நிஹால் - யகுபோவ் களமாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சரின், 47 வது நகர்த்தலில் போட்டியை சமனில் முடித்தார்.

செஸ் ஒலிம்பியாட்: 10 வது சுற்றில் இந்தியாவின் வெற்றி!
செஸ் ஒலிம்பியாட்: 10 வது சுற்றில் இந்தியாவின் வெற்றி!

அடுத்ததாக பிரக்ஞானந்தா - ஜவோஹிர் ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 77 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அதிபன் - ஜஹாகாங்கிர் ஆடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அதிபன், 33 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். இதன் மூலம் 2-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா போட்டியை சமன் செய்தது.

ஓபன் சி Vs ஸ்லோவேக்கியா சூர்யா சேகர் கங்குலி - ஜெர்க்ஸ் விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய சூர்யா, 43 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். அடுத்ததாக சேதுராமன் - விக்டர் விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சேது, 53 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார்.

பின்னர் கார்த்திகேயன் முரளி - ஜூராய் ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய முரளி, 46 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். தொடர்ந்து புரானிக் அபிமன்யு - கிறிஸ்டோபர் ஆடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அபிமன்யு, 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனால் 2-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா போட்டியை சமனில் முடித்தது.

இந்தியா பெண்கள் ஏ Vs கஜகஸ்தான் கொனெரு ஹம்பி - சான்சாயா களமாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஹம்பி, 56 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மேலும் வைஷாலி - பிபிசாரா களமாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய வைஷாலி, 50 வது நகர்த்தலில் போட்டியை சமனில் முடித்தார்.

தொடர்ந்து தானியா சச்தேவ் - ஃஸேனியா களம் காணும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தானியா, 31 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார். அடுத்ததாக பாக்தி குல்கர்னி - குலிஸ்கான் களம் கண்டபோது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பாக்தி, 47 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா பெண்கள் பி Vs நெதர்லாந்து வந்திகா அகர்வால் - ஜாக்கின் பெங் ஆடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய வந்திகா, 59 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார். பின்னர் பத்மினி ரவுட் - மேக்டேல்ட் ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பத்மினி, 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

கோம்ஸ் மேரி அன் - ரோசா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய மேரி, 43 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார். அடுத்ததாக திவ்யா தேஷ்முக் - லஞ்சவா டி விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 54 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனால் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா பெண்கள் சி Vs ஸ்வீடன் ஈஷா கர்வாடே - கேமலிங் பியா களமாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஈஷா, 45 வது நகர்த்தலில் போட்டியை சமனில் முடித்தார். தொடர்ந்து நந்திதா - இனா ஆக்ரஸ்ட் களமாடுகையைல், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய நந்திதா, 67 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

சாகிதி வர்ஷினி - ஆனா கிராமிலிங் களம் கண்டபோது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வர்ஷினி, 53 வது நகர்த்தலில் போட்டியை சமனில் முடித்தார். அடுத்ததாக பிரத்யுஷா போடா - விக்டோரியா களத்தில் சந்தித்தபோது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரத்யுஷா, 64 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார். இதன் மூலம் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

மேலும் இந்த சுற்றில் கஜகஸ்தானை வீழ்த்திய இந்திய பெண்கள் ஏ அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுள்ளது. மேலும் செஸ் ஒலிம்பியாட்டின் 9 சுற்றுகளில் தோல்வி அடையாத குகேஷ், 10 வது சுற்றில் உலக ராபிட் சாம்பியன் நோடிர்பெக்கிடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா : 9-வது சுற்று முடிவுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.