ETV Bharat / state

ரூ.9 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - தமிழ் இளைஞர்கள் ஹைதரபாத்தில் கைது

ஹைதராபாத் ராஜ்குண்டா தனிப்படை காவல் துறையினர் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டரை கிலோ சூடோநெஃப்ரின் எனப்படும் போதைப்பொருளை கடத்த முயன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
author img

By

Published : Dec 14, 2022, 10:08 PM IST

ஹைதராபாத் ராஜ் குண்டா காவல் துறையினருக்கு வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாஜ்ராம் என்ற பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது எட்டரை கிலோ சூடோநெப்ரின் எனப்படும் போதைப்பொருளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். போதைப்பொருளை கடத்த முயன்ற முகமது காசிம் மற்றும் ரசலுதீன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள் கும்பல் செயல்பட்டு, சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரை பற்றி விசாரணை மேற்கொண்டதில் திருவல்லிக்கேணி திபுனலி தெருவில் வசித்துக்கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ரசுலுதீன் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ரசுலுதீனுக்கு சொந்த ஊர் சிவகங்கை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

போலி பாஸ்போர்ட், ஆதார் கார்டு பறிமுதல்
போலி பாஸ்போர்ட், ஆதார் கார்டு பறிமுதல்

இதேபோல் முகமது காசிம் பற்றி விசாரணை செய்தபோது ஆதாம் மார்க்கெட் பகுதியில் திருவல்லிக்கேணியில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. இருவரையும் ஹைதராபாத் காவல் துறையினர் நான்கு கிலோ எப்பிடெப்பரின் போதைப்பொருள்களுடன் கைது செய்து ஹைதராபாத் அழைத்துச்சென்றுள்ளனர். இவர்கள் மீது தமிழ்நாட்டில் எந்தவித போதைப்பொருள் வழக்கும் இல்லை என சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல்
கொரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல்

இருப்பினும் இவர்களிடம் விசாரணை செய்ததில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பரித், ஃபைசல் என்ற இருவரும் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஹீம் ரியாஸ் ஆகிய இருவரும் போதைப் பொருள் கும்பலில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் இந்த நான்கு பேரையும் ஹைதராபாத் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக சென்னையில் தேடி வருகின்றனர்.

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை மூலம் தமிழ்நாட்டில் கொரியர் பார்சல் மூலமாக போதைப்பொருளை கடத்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த போதைப் பொருள் கும்பல் ஹைதராபாத் மற்றும் பூனே வழியாக ஏர் கார்கோவில் கொரியர் மூலமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியது தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஹைதராபாத் மற்றும் பூனே ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் ஆதார் கார்டு மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி ஏர் கார்கோ மூலம் சூடோ நெஃப்ரின் போன்ற போதைப் பொருள்களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு 15 கன்சைன்மென்ட் மூலமாக சுமார் 70 கிலோவிற்கும் மேல், சூடோநெப்ரின் போதைப் பொருளை கடத்தியதையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்

சுமார் 85 கோடி ரூபாய் அளவிற்கு போதைப்பொருள்களை இவர்கள் கடத்தியிருப்பது விசாரணையில் அம்பலமானது. தற்போது பிடிபட்ட எட்டரை கிலோ போதைப்பொருள் மதிப்பு மட்டும் 9 கோடி ரூபாய் ஆகும். போதைப்பொருளுடன் நான்கரை லட்சம் பணமும், போலி ஆதார் அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஹைதராபாத் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறையினரின் உதவியுடன் இந்த போதைப் பொருள் கும்பலில் தொடர்புடைய மற்றவர்களையும் இதன் பின்னணியில் செயல்படுபவர்கள் குறித்தும் ஹைதராபாத் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு வழியாகவும் போதைப் பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறதா என்ற விசாரணையும் தமிழ்நாடு காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; 5 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.