ETV Bharat / state

புகார்தாரர்களின் குழந்தைகளுக்காக குட்டி பிளே ஸ்கூலாக மாறிய காவல் நிலையங்கள்...! - சென்னையில் பெண்கள்

சென்னை: மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்களின் குழந்தைகள் விளையாடும் வகையில், குழந்தைகள் நேய காவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புகார்தாரர்களின் குழந்தைகளுக்காக குட்டி பிளே ஸ்கூலாக மாறிய காவல் நிலையங்கள்

author img

By

Published : Oct 30, 2020, 12:29 PM IST

சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பாலியல் தொந்தரவு உள்ளிட்ட புகார்கள் அளிக்க பெண்கள் தயங்கியதால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மட்டும் விசாரிப்பதற்காக 35 பெண் காவல் நிலையங்கள் சென்னையில் அமைக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் அந்த 35 காவல் நிலையத்திற்கும் அம்மா ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டன.

இந்நிலையில் அதற்கும் ஒருபடி மேலே மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகள் நேய காவல் மையத்தை தொடங்கியுள்ளனர். குழந்தைகளின் அச்சத்தை போக்கும் வகையில் சுவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டு, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளனர்.

சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களில், முதற்கட்டமாக 23 நிலையங்களில் இது போன்ற மையத்தை ஏற்படுத்தியுள்ளனர். சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இதனை தொடங்கி வைத்தார். இதனால், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகள் காவல் நிலையங்களுக்கு வர நேரிட்டால் காவல் நிலைய சூழலானது அவர்களுக்கு எவ்வித தயக்கத்தையோ, அச்சத்தையோ ஏற்படுத்தாத வண்ணம் இயல்பான மனநிலையை கொடுக்கும் விதத்தில் செயல்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

புகார்தாரர்களின் குழந்தைகளுக்காக குட்டி பிளே ஸ்கூலாக மாறிய காவல் நிலையங்கள்

மேலும், இனி வரும் காலங்களில் காவல் நிலையங்களுக்கு வரும் குழந்தைகள் மகிழ்வான மனநிலையுடன் இருக்கவும், சொல்ல வரும் விஷயங்களை தெளிவாக கூறுவதற்கு ஏதுவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காவல் நிலையங்களின் இந்த சூழலானது குழந்தைகளுக்கு மன நிறைவைத் தருவதாகவும் இதன் மூலம் தகவல்களை எளிதில் பெறுவதற்கும் இதனால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படாமல் பாதுகாப்புடன் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...நீங்க வாங்க ரஜினி: அண்ணா அறிவாலயம் அருகில் போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.