ETV Bharat / state

சென்னையில் அக்.4, 5 தேதிகளில் இங்கெல்லாம் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு! - சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Chennai Water Board Announcement: குடிநீர் உந்து குழாய் இணைப்பு பணி காரணமாக ராயபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் சில பகுதிகளில் 5ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாகச் சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 7:55 PM IST

Updated : Oct 2, 2023, 8:08 PM IST

சென்னை: பிரதான குடிநீர் உந்து குழாய் இணைப்புப் பணி காரணமாக அண்ணா நகர், திரு.வி.க நகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, “மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், புரசைவாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் அக்டோபர் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 5ஆம் தேதி காலை 10 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

குடிநீர் நிறுத்தப்படும் இடங்கள்:

  • தண்டையாா்பேட்டை மண்டலத்தில் பெரம்பூா், எருக்கஞ்சேரி, பழைய வண்ணாரப்பேட்டை.
  • ராயபுரம் மண்டலத்தில் ஜாா்ஜ் டவுன், ஏழு கிணறு சாலை, முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூா், பூங்கா நகா், தம்புசெட்டி தெரு, கெங்கு ரெட்டி சாலை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை.
  • திரு.வி.க. நகா் மண்டலத்தில் புளியந்தோப்பு, பெரம்பூா் பேரக்ஸ் சாலை.
  • அண்ணா நகா் மண்டலத்தில்: ஈ.வி.ஆா் சாலை, பிரான்சன் காா்டன், கெல்லீஸ், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம்.
  • தேனாம்பேட்டை மண்டலத்தில்: திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்குக் குடிநீர்த் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Chennai Metro: ஒன்பது மாதத்தில் 6 கோடி மக்கள் பயணம்..! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சொன்ன தகவல்!

Last Updated : Oct 2, 2023, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.