ETV Bharat / state

யானைகவுனி கொலை வழக்கு - குற்றவாளிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - sowcarpettai

சென்னை: யானைகவுனி 3 பேர் கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai triple murder case
chennai triple murder case
author img

By

Published : Nov 18, 2020, 8:17 PM IST

சென்னை யானைகவுனியில் கடந்த 10ஆம் தேதி தலில்சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய யானைகவுனி போலீசார், தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர்களான கைலாஷ், விகாஷ் உட்பட 6 பேர் காரில் வந்து துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. கார் எண்ணை வைத்து புனேவில் பதுங்கியிருந்த கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத் கர் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ய பயன்படுத்தியது கள்ளத்துப்பாக்கி என தெரியவந்தது. பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயமாலா, மற்றொரு சகோதரர் விகாஷ், ராஜீவ் ஷிண்டே ஆகியோரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், யானைகவுனி போலீசார் கைது செய்த மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று காலை 11 மணியளவில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீசார் குற்றவாளிகளை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை அதிகாரியாக பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவை நியமித்து, 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

முதற்கட்டமாக கைதான 3 பேரையும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொலை செய்ய திட்டமிட்டது எப்படி என்பது குறித்த விசாரணையை நடத்த இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொலை செய்ய பயன்படுத்திய கள்ளத்துப்பாக்கியை யாரிடம் வாங்கினார்கள்? என்பது குறித்தும், கொலை செய்தது எப்படி என நடந்த இடத்திற்கு அழைத்து சென்று நடித்து காட்டி வீடியோவாக பதிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.